இந்திய ராணுவ வீரர்கள் ஆயுதமின்றி தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்களா? – ராகுல் காந்தி கேள்வி

 

இந்திய ராணுவ வீரர்கள் ஆயுதமின்றி தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்களா? – ராகுல் காந்தி கேள்வி

இந்திய ராணுவ வீரர்கள் ஆயுதம் எதுவும் இன்றி எதற்காக அனுப்பப்பட்டார்கள், அவர்கள் தங்களை தியாகம் செய்யட்டும் என்றே அனுப்பப்பட்டார்களா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

http://


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியை பதிவிட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் சீன ராணுவம் லடாக்கில் இரண்டு கி.மீ தூரத்துக்கு உள்ளே வந்து அது தங்கள் நிலப்பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. சீனா திட்டமிட்டு எல்லைத்தாண்டி வந்து பிரச்னை செய்கிறது. இதை ராணுவ ரீதியாக எதிர்கொள்வது முதல்கட்டம் இல்லை.

இந்திய ராணுவ வீரர்கள் ஆயுதமின்றி தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்களா? – ராகுல் காந்தி கேள்வி

இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையாக கருதி இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து ராணுவ ரீதியாக எதிர்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த அன்று இந்திய ராணுவ வீரர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை” என்று கூறியிருந்தார்.

http://


அதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆயுதமின்றி வந்த இந்திய ராணுவ வீரர்களைக் கொல்ல சீன ராணுவத்துக்கு எவ்வளவு தைரியம்?, நம்முடைய ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் இன்றி ஏன் அனுப்பப்பட்டார்கள், அவர்கள் தங்களை தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்களா?” என்று கூறியுள்ளார்.