தோனி கேப்டன்ஷிப் இருந்தும் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி எதனால்? #CSK

 

தோனி கேப்டன்ஷிப் இருந்தும் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி எதனால்? #CSK

ஐபிஎல் 2020 போட்டிகள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்ற ஆண்டு சாம்பியன் மும்பையை எதிர்கொண்டது தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் முதல் வெற்றி பெற்றது. யார் கண் பட்டதோ அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

தோனி கேப்டன்ஷிப் இருந்தும் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி எதனால்? #CSK

ராஜஸ்தான் போட்டியை எடுத்துக்கொண்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களின் தாராளத்தால் ராஜஸ்தான் 216 ரன்கள் குவித்தது. அதிலும் பியூஷ் சாவ்லா 4 ஓவருக்கு 55 ரன்களை வாரிக்கொடுத்தார்.

சென்னை பேட்டிங்கில் வழக்கம்போல முரளி விஜய், சொதப்ப, டூ பிளஸி மானத்தைக் காப்பாற்றினார். கடைசி வரை போராடி தோல்வியே கிடைத்தது.

தோனி கேப்டன்ஷிப் இருந்தும் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி எதனால்? #CSK

டெல்லியோடு மோதிய போட்டியில் ப்ரதிவ் ஷா விக்கெட்டை வீழ்த்த முடியாததால் அவர் அதிரடியக ஆடினார். டெல்லியின் ஸ்கோர் 175 ஆக உயர்ந்தது. சென்னை பேட்டிங்கில் டூ பிளஸி மட்டுமே 43 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் ஒருவரும் 30 ரன்கள் பக்கத்தில் கூட வரவில்லை.

ஹைதராபாத்துடன் மோதிய போட்டியில் ப்ரியம் கார்க், அபிஷேக் ஷர்மா இருவரும் கடைசி நேரத்தில் அடுத்து ஆடினாலும் ஸ்கோர் 164 தான். ஆனால், இதையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடியவில்லை என்பதே சோகம்.

தோனி கேப்டன்ஷிப் இருந்தும் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி எதனால்? #CSK

சென்னை சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் நல்ல வீரர்கள் இருந்தும் டூ பிளஸியைத் தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தவே இல்லை என்றே சொல்லலாம்.

முரளி விஜய் மூன்று போட்டிகளில் சொதப்பினார். கேதர் ஜாதவ் நான்கு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டைப் பறிக்கொடுக்கிறார். ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடாததால் மிடில் ஆர்டரில் பெரும் சுமை வந்துவிடுகிறது. மிடில் ஆடரில் சாம் கரணை முன்கூட்டி இறக்கியதில் ஒரு பிரச்சனை பெரிதாக எழுந்ததால் தோனி அந்த ரிஸ்கை நேற்றைய போட்டியில் எடுக்க வில்லை.

தோனி கேப்டன்ஷிப் இருந்தும் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி எதனால்? #CSK

பின் வரிசையில் நம்பிக்கைத் தரும் பேட்ஸ்மேன் இல்லாததால் மிடில் ஆர்டரில் அடித்து ஆட தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், நேற்று பிராவோ இருந்தும் தோனி – ஜடேஜா மெதுவாக ஆடியதற்கு காரணம் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இந்த நேரத்தில்தான் சுரேஷ் ரெய்னா இல்லாததை யோசிக்க வைக்கிறது.

சென்னை அணியின் ஹாட்ரிக் தோல்விகளுக்கு பேட்ஸ்மேன்களே முதன்மையான காரணம். ஏனெனில் டி20 போட்டிகளே பேட்ஸ்மேன் கேம்தான். சிஎஸ்கே வைப் பொறுத்தவரை வாட்சன், டு பிளஸி, தோனி, பிராவோ என சீனியர் வீரர்கள் என்பது சென்ற ஆண்டு கேலி செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டி வரை சென்று சீனியர் என்பது ’அனுபம் மிக்க’ என்று அடித்துச் சொல்லியது. அதனால், இந்த ஆண்டில் சீனியர் வீரர்கள் எனக் கேலி வராமால், அனுபவ வீரர்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அந்தளவு ஆட்டம் வெளிப்பட வில்லை. எனவே சென்ற ஆண்டின் விமர்சனம் திரும்பவும் வரக்கூடும்.

தோனி கேப்டன்ஷிப் இருந்தும் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி எதனால்? #CSK

பேட்ஸ்மேன்கள் ஃபார்ம்க்குத் திரும்பாமல் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு வெற்றி சாத்தியமில்லை. ஆனால், அதுவும் உடனே திரும்ப வேண்டும். இல்லையெனில், ப்ளே ஆப் சுற்றுகூட என்பது கனவாகி விடும்.