பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ஏன் இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை?

 

பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ஏன் இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை?

முதல்வர் பழனிசாமிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரிக்க தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. பெண் எஸ்.பியை புகாரளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி முருகனுக்கு எதிராகவும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ஏன் இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை?

இதனிடையே, இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. நேற்று முன் தினம் நடைபெற்ற விசாரணையின் போது, இச்சம்பவம் தொடர்பாக 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றமே நேரடியாக கண்காணிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ஏன் இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை?

இந்த நிலையில் இன்று மீண்டும் ராஜேஷ் தாஸுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் அதிகாரியை தடுத்த எஸ்.பி மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், விசாரணை அறிக்கையை மார்ச் 16ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ராஜேஷ் தாஸுக்கு எதிராக பாலியல் புகார் எழுந்ததையடுத்து, அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாரே தவிர சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.