மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? ஓபிஎஸ் உடைத்த ரகசியம்!

 

மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? ஓபிஎஸ் உடைத்த ரகசியம்!

மத்திய அரசை ஆதரிப்பதை ஏன்? என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? ஓபிஎஸ் உடைத்த ரகசியம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தியது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? ஓபிஎஸ் உடைத்த ரகசியம்!

விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், “அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதுகூட பெருமைதான். எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநில வருவாயில் 60% நிதியை ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக செலவிட்டவர் ஜெயலலிதா . திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன்…திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டபோது என்ன மாதிரியான உருப்படியான திட்டங்களை அளித்தீர்கள்? பொதுமக்களிடத்தில் அதிமுக ஆட்சிக்கு எந்தவித கெட்ட பெயரும் இல்லை; ஜெயலலிதா இருந்த போது எப்படி இருந்ததோ, இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறது, 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம்.மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காதபோதும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று தந்துள்ளோம்” என்றார்.