தேர்தல் பிரச்சாரங்களில் கேலி, கிண்டல் மூலம் கவனிக்க வைக்கும் எடப்பாடி பழனிசாமி !

 

தேர்தல் பிரச்சாரங்களில் கேலி, கிண்டல் மூலம் கவனிக்க வைக்கும் எடப்பாடி பழனிசாமி !

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலில் தொடங்கிய கட்சி அதிமுக. அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தனிப்பட்ட பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். முதலில் சேலத்திலும், பின்னர் நாமக்கல், திருச்சி என பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டங்களில் மக்கள் அவரது பேச்சை சுவராஸ்யமாக கவனிப்பதாக எதிர்க் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் பிரச்சாரங்களில் கேலி, கிண்டல் மூலம் கவனிக்க வைக்கும் எடப்பாடி பழனிசாமி !

அவரது பேச்சை தொடர்ச்சியாக கவனிப்பவர்கள் சொல்லும்போது, பொதுவாக, கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். இதனால் ஒரு தடவைக்கு மேல் கேட்டால் அந்த பேச்சு சலித்துவிடும். ஆனால், முதலமைச்சர் எடப்பாடியின் பேச்சு இதிலிருந்து வேறுபட்டுள்ளது. எல்லா ஊர்களிலும் புதிய புதிய விஷயங்கள் தொடுகிறார். அந்த ஊர்குறித்த தகவல்கள், அங்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிடுவதால் மக்கள் கவனிக்கின்றனர். அந்த கூட்டத்திலியே எதிர்கட்சிகள் குறித்த புதிய புதிய விஷயங்களை பட்டியலிடுகிறார். எடப்பாடி பழனிசாமியில் சமீபத்திய பிரச்சாரங்களில் எதிர்கட்சிகள் குறித்த நக்கல், நையாண்டி, கேலி என கலந்து பேசுவதால் மக்களை எளிதில் ஈர்த்து விடுகிறது.

தேர்தல் பிரச்சாரங்களில் கேலி, கிண்டல் மூலம் கவனிக்க வைக்கும் எடப்பாடி பழனிசாமி !

முக்கியமாக அந்த கூட்டத்திலேயே எதிர்கட்சிகளின் அவதூறுக்கு பதில் சொல்வதால், அந்த செய்தி உடனே வைரலாகிவிடுகிறது. அதுபோல வெளியூர்களில் அவர் பேசிவிட்டு சென்னை வருவதற்கும் அந்த செய்தி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்யப்படுகிறது. திருச்சி பிரச்சாரத்தில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினை ஒரு பிடி பிடித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களில் கேலி, கிண்டல் மூலம் கவனிக்க வைக்கும் எடப்பாடி பழனிசாமி !

‘’கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து பொதுமக்களை திமுக ஏமாற்றியது. அதனால், தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ஆட்சியில் இல்லாத திமுக எப்படி மத்திய அரசு நிதி பெற முடியும்? தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு நிறுவனங்களை எப்படி கொண்டு வர முடியும் என கேள்வி எழுப்பினார். இது போன்ற பேச்சுகளில் உள்ள நியாயம் மக்களிடம் உடனடியாக எடுபடுகிறது.

’’ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கு ‘நோபல் பரிசு’ கொடுக்கலாம்’’ என கூட்டத்தினரை சிரிக்கவைத்தார். ஸ்டாலின் மரியாதை தெரியாதவர் என்பதால்தான், மக்கள் திமுகவுக்கு மரியாதை கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வர நினைக்கும் அராஜகக் கட்சி திமுக கனவை மக்கள் கத்தரிக்கோல் போட்டு வெட்டவேண்டும் என கிண்டலாக கூறியதும் மக்களிடம் கைதட்டுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரங்களில் கேலி, கிண்டல் மூலம் கவனிக்க வைக்கும் எடப்பாடி பழனிசாமி !

திமுகவின் வாரிசு அரசியலை விமர்சனம் செய்யும்போது, திமுகவில் எல்லா பக்கமும் வாரிசுகளே பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேரு, துரைமுருகன், பெரியசாமி இவர்கள் எல்லாம் ஏன் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை ? மக்களிடம் செல்வாக்கு இழந்துவிட்டார்களா ? மக்களிடம் செல்வாக்கு இல்லாதவர்கள் ஏன் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என எதிர்கட்சிக்கு ஒரு ’நறுக்’ வைத்தார்.

‘’ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரத்தான டெண்டர் குறித்து, திமுக சார்பில் ஆளுநரிடம் புகார் மனு கொடுக்கிறார்கள் . ’ரத்தான டெண்டர் குறித்து’ என அவர் அழுத்தம் கொடுக்கும்போது மக்கள் ரசிக்கிறார்கள். இப்படி சமீப நாட்களாக அவரது பேச்சு எல்லா தரப்பு மக்களிடமும் ரீச் ஆகி வருவது அதிமுகவினரை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையும் கவனிக்க வைத்துள்ளது என்கின்றனர்.