அமித்ஷாவை பார்த்து திமுக ஏன் பயப்பட வேண்டும்? கே.என்.நேரு

 

அமித்ஷாவை பார்த்து திமுக ஏன் பயப்பட வேண்டும்? கே.என்.நேரு

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் பரப்புரை குறித்து அக்கட்சியின் நிர்வாகி கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

அமித்ஷாவை பார்த்து திமுக ஏன் பயப்பட வேண்டும்? கே.என்.நேரு

இந்நிலையில் இன்று சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் முதன்மை செயலாளர் கே.என். நேரு, “‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரையின் மூலம் 75 நாட்களில் 1500 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் பரப்புரை மேற்கொள்கிறார். இதை தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி எம்.பி. கனிமொழி, திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதை தொடர்ந்து டிச 2 ஆம் தேதி பொன்முடியும், டிசம்பர் 11 ஆம் தேதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் பரப்புரையை துவங்குவர்” என்றும் கூறியுள்ளார்.

அமித்ஷாவை பார்த்து திமுக ஏன் பயப்பட வேண்டும்? கே.என்.நேரு

தொடர்ந்து பேசிய அவர், ‘மக்களின் ஆதரவை பெற்று சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று கூறிய அவர், அமித்ஷாவின் தமிழக வருகைக்கு அதிமுக அமைச்சர்களே பயப்படாத போது, நாங்கள் ஏன் பயப்பட போகிறோம்’ என்று கேள்வி எழுப்பினார்.