ராமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது? நீதிபதிகள் கேள்வி

ராமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது? நீதிபதிகள் கேள்வி

ரமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது? நீதிபதிகள் கேள்வி

ரமேஸ்வரத்தில் விமானம் நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், சுற்றுலாத் தலமான காரைக்குடியில் பாண்டிய மன்னன் மீனாட்சி அம்மன் கோவில், செட்டிநாடு அரண்மனை உள்ளிட்ட பல புகழ் பெற்ற இடங்கள் இருக்கின்றன. இதனால் இந்த இடத்துக்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். 3ம் உலகப் போருக்கு முன்னர் செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் இருந்திருக்கிறது.

ராமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது? நீதிபதிகள் கேள்வி

தற்போதும் அதற்கான வசதிகள் அனைத்தும் இருக்கும் நிலையில், செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செட்டிநாடு அருகே ராமநாதபுரம் இருக்கிறது. இங்கு ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், இங்கு ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.