சூரப்பாவுக்காக ஏன் கமல் பதறுகிறார்? – விசிக ஷாநாவாஸ் கேள்வி

 

சூரப்பாவுக்காக ஏன் கமல் பதறுகிறார்? – விசிக ஷாநாவாஸ் கேள்வி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் தொடங்கி விட்டன. தமிழகத்திலேயே தகுதியானவர்கள் இருக்கிறார்களே என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்பின் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கருத்துகளைக் கேட்கவில்லை என்ற விமர்சனமும் வந்தன.

சூரப்பாவுக்காக ஏன் கமல் பதறுகிறார்? – விசிக ஷாநாவாஸ் கேள்வி

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சூரப்பாவுக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ”துணை வேந்தர் சூரப்பாவின் கொள்கை சார்புகள் மற்றும் அவரின் அரசியல் நிலைபாடுகளில் மாற்றுக் கருத்து இருக்கலாம். அதற்காக நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரின் அடையாளத்தை அழிக்க நினைப்பதா… ஊழல்வாதிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்” என்று கொந்தளித்து பேசியிருந்தார் கமல்ஹாசன்.

சூரப்பாவுக்காக ஏன் கமல் பதறுகிறார்? – விசிக ஷாநாவாஸ் கேள்வி

கமல்ஹாசனின் வீடியோவுக்குப் பலதரப்பட்ட எதிர்வினைகள் வந்தன. ஆதரவு கருத்துகளும் வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கமல் வீடியோ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

சூரப்பாவுக்காக ஏன் கமல் பதறுகிறார்? – விசிக ஷாநாவாஸ் கேள்வி

அதில், ”நமது அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்து அமர்ந்து கொண்டு, மாநில அரசை அவமதித்து மத்திய அரசுடன் நேரடியாக உரையாடுவதும், பல்கலைக்கழகத்தை நானே நடத்துவேன் என்று சொல்வதும் தான் நேர்மைக்கு அழகா?

சூரப்பா மீது விசாரணை என்றதும் கவர்னர் பதறுகிறார். கமல் ஏன் பதறுகிறார்? அப்படியெனில் கமல் யார்?” என்று கேள்வி கேட்டுள்ளார்.