இதை படிச்சா சிகெரெட்டை இந்த செகண்டே விட்டுருவீங்க ..

 

இதை படிச்சா சிகெரெட்டை இந்த செகண்டே விட்டுருவீங்க ..

இந்தியாவில் புற்றுநோய்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் புகையிலை நுகர்வு காரணமாக இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. முன்னதாக நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று புற்றுநோயியல் இயக்குநரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் இந்தூ பன்சால் குறிப்பிட்டுள்ளார் .

இதை படிச்சா சிகெரெட்டை இந்த செகண்டே விட்டுருவீங்க ..


பெண்களின் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிறந்த சிகிச்சையைத் கொடுத்தது பல பெண்களுக்கு உதவிகரமாக இருந்தது
அதே வழியில், நாட்டில் தற்போதுள்ள புகைபிடிப்பதைக் கருத்தில் கொண்டு நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை ஊக்குவிக்கப்பட வேண்டும். குளோபல் அடல்ட் புகையிலை கணக்கெடுப்பின் கூற்றுப்படி, 2016-17 ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 267 மில்லியன் பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள் , இதில் கைனி, குட்கா மற்றும் சிகரட் போன்றவை அடங்கும்.
நாட்டில் 3 அல்லது 4 ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்கள் அதிகம் பதிவாகின்றன. எனவே, வழக்கமான நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை என்பது புகையிலை பயன்படுத்துபவர்களின் ஆபத்தான கட்டத்தை அறிந்து கொள்ளும். புற்றுநோயைப் பொருத்தவரை, ஆரம்பகால கண்டறிதல் மட்டுமே அவர்களின் உயிரை காப்பாற்ற வழி செய்யும்..
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை புகைப்பிடிப்பவர்களை வாழ்க்கைத் தரத்தை ஊக்குவிக்க உதவும். தவறாமல் ஸ்கிரீனிங் செய்வது அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையைத் தேர்வுசெய்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி செய்யும் . நோயாளியின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள இது ஒரு எச்ச்ரிக்கையாகவும் இருக்கும் .

இதை படிச்சா சிகெரெட்டை இந்த செகண்டே விட்டுருவீங்க ..

.