வி.ஐ.பி-க்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்

 

வி.ஐ.பி-க்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்

வி.ஐ.பி-க்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு வந்தால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது ஏன் என்று கேட்டதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.

வி.ஐ.பி-க்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்தமிழகத்தில் கொரோனாத் தொற்று தினமும் 5000ஐ நெருங்கும் நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்கு தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் அமைச்சர்கள் ஒரு சில நாட்களில் முழு உடல் நலம் பெற்று வீடு திரும்பியதாக தகவல் வெளியாகிறது.

வி.ஐ.பி-க்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் இது பற்றி செய்தி ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், “தனியார் மருத்துவமனைகளில் பிரைவசி இருக்கும். என் மனைவிக்கு முதலில் தொற்று ஏற்பட்டது. பிரைவசிக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பிறகு எனக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவே, அதே மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். தனியார் மருத்துவமனையில் இருந்தாலும், அரசு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றேன்.

எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான சிகிச்சைதான். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம். நான் அங்கு அட்மிட் ஆனால், மற்ற நோயாளிகளை விட்டுவிட்டு என்னைக் கவனித்ததாக குற்றச்சாட்டு எழும். அதனால் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறோம்” என்றார்.