ஓ… கூட்டணி கட்சிக்கு கம்மியா சீட் குடுக்க இதான் காரணமா? – சீக்ரெட்டை பட்டென உடைத்த எ.வ. வேலு

 

ஓ… கூட்டணி கட்சிக்கு கம்மியா சீட் குடுக்க இதான் காரணமா? – சீக்ரெட்டை பட்டென உடைத்த எ.வ. வேலு

திமுக கூட்டணியில் எந்தக் கட்சியுடனும் அவ்வளவு சீக்கிரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. திமுக 180 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. கூட்டணிக் கட்சிகளும் திமுக கொடுத்ததை வாங்கி கொண்டு வெளியே வந்து பாஜகவுக்கு எதிராகவே சமரசத்திற்கு ஆளாகினோம் என்றார்கள். குறைவான தொகுதிகள் கிடைத்தன் அதிருப்தி அவர்களின் முகங்களிலேயே காணப்பட்டன. தற்போது இந்த விவகாரத்தை விரிவாக விளக்கியுள்ளார் திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு.

ஓ… கூட்டணி கட்சிக்கு கம்மியா சீட் குடுக்க இதான் காரணமா? – சீக்ரெட்டை பட்டென உடைத்த எ.வ. வேலு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வேலு அறிமுகம் செய்துவைத்தார்.

ஓ… கூட்டணி கட்சிக்கு கம்மியா சீட் குடுக்க இதான் காரணமா? – சீக்ரெட்டை பட்டென உடைத்த எ.வ. வேலு

அதன்பின் பேசிய எ.வ. வேலு, ” தற்போது நடக்கவிருக்கும் தேர்தல், சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையேயான தேர்தல். இதில் சமூகநீதி நிலைக்க, வெற்றிபெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக என்கிற கட்சியே இருக்கக்கூடாது, திமுக-பாஜக இடையேதான் போட்டி இருக்க வேண்டும் என பாஜகவினர் நினைக்கிறார்கள். அதிமுகவினர் நம்மிடம் சகோதரர்களாக பழகுபவர்கள். அவர்களின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

CPI gets 6 seats in the DMK alliance - The Hindu

தமிழகத்தில் ஆட்சியமைக்க 121 இடங்களில் வெற்றிபெற்றாலே ஆட்சி அமைத்திட முடியும். ஆனால், தற்போது இந்த எண்ணில் வெற்றிபெற்றால், ஆட்சி அமைத்துவிட்டு நிம்மதியாக துாங்க முடியாது. எந்த நேரத்திலும், எம்எல்ஏக்கள் விலைபோகும் நிலைக்குத் தள்ளப்படுவர். இதற்கு சமீபத்திய உதாரணம் புதுச்சேரி. குறைந்த எண்ணிக்கை எம்எல்ஏக்களை வைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்ததால், அவர்களை பாஜகவினர் விலைகொடுத்து வாங்கி ஆட்சியைக் கலைத்துவிட்டனர். அதுபோன்ற நிலை திமுகவிற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் திமுக அதிக இடங்களில் போட்டியிடுகிறது.

ஓ… கூட்டணி கட்சிக்கு கம்மியா சீட் குடுக்க இதான் காரணமா? – சீக்ரெட்டை பட்டென உடைத்த எ.வ. வேலு

150க்கும் மேலான இடங்களில் வெற்றிபெற்றால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும் என்ற நிலை இன்று உள்ளது. இதை உணர்ந்துதான் கூட்டணிக் கட்சியினர் திமுக அதிக இடங்களில் போட்டியிடும் முடிவு சரியானது என உணர்ந்துள்ளனர். எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும். திருவண்ணாமலை தொகுதியில், பாஜகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் நாம் தேர்தல் பணி சிறப்பாக செய்துள்ளோம் என்பதற்கான அடையாளம்” என்றார்.