விஜயகாந்த் காலில் கருணாநிதி விழுவது போன்ற கார்ட்டூனை வெளியிட்டது ஏன் ? எல்.கே. சுதீஷ் விளக்கம்!

விஜயகாந்த் காலில் கருணாநிதி விழுவது போன்ற கார்ட்டூனை வெளியிட்டது ஏன் ? எல்.கே. சுதீஷ் விளக்கம்!

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்ற கார்ட்டூனை பதிவிட்டார்.

விஜயகாந்த் காலில் கருணாநிதி விழுவது போன்ற கார்ட்டூனை வெளியிட்டது ஏன் ? எல்.கே. சுதீஷ் விளக்கம்!

அதில் குறிப்பாக மஞ்சள் துண்டு அணிந்த ஒருவர் விஜயகாந்த் காலில் விழுவது போல அந்த கார்டூனில் சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடுப்பான திமுகவினர் சமூக வலைதளங்களில் சுதீஷை வறுத்தெடுத்தனர். இதை தொடர்ந்து திமுக எம்பி செந்தில் சுதீஷ் இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதன் காரணமாக பதிவிட்ட சில நிமிடங்களில் அக்கார்ட்டூனை சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

விஜயகாந்த் காலில் கருணாநிதி விழுவது போன்ற கார்ட்டூனை வெளியிட்டது ஏன் ? எல்.கே. சுதீஷ் விளக்கம்!

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ்,”அந்த கார்ட்டூனை நாங்கள் உருவாக்கவில்லை. அது ஏற்கெனவே வந்த பழைய கார்ட்டூன். கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன். அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.
பார்வேர்டாக வந்த போட்டோவை தான் நான் பதிவிட்டேன். ஒவ்வொரு தேர்தலின் போதும் தேமுதிகவை கேலியாக சித்தரித்து இப்படி செய்கிறார்கள். இது தவறு என்பதை சுட்டிகாட்டவே பதிவிட்டேன். அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.