சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் போட்டியிடுவது ஏன்? உதயநிதி விளக்கம்!

 

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் போட்டியிடுவது ஏன்? உதயநிதி விளக்கம்!

ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் தயாராக உள்ளனர்என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் போட்டியிடுவது ஏன்? உதயநிதி விளக்கம்!

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அதன் பகுதி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். அதனால்தான் இந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். என்னுடைய பிரச்சாரத்தை பொறுத்து எனது வெற்றி வாய்ப்பு இருக்கும் .என்னுடைய வெற்றியை மக்கள் முடிவு செய்து விடுவார்கள்” என்று கூறினார்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் போட்டியிடுவது ஏன்? உதயநிதி விளக்கம்!

அதை தொடர்ந்து பாஜக சார்பாக குஷ்பு போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், எனக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கவில்லை . தலைமை எனக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் இதுகுறித்து நான் பதில் சொல்ல முடியும் என்றார் . தொடர்ந்து பேசிய அவர், 25 நாள் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் சிறந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் தயாராக உள்ளனர் . திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்