“இது கொரோனா 2ஆம் அலை அல்ல… கொரோனா சுனாமி”

 

“இது கொரோனா 2ஆம் அலை அல்ல… கொரோனா சுனாமி”

இந்தியாவின் தலைநகரான டெல்லி தான் கொரோனா கோர தாண்டவத்தால் திண்டாடி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் தொற்றின் தீவிரத்தாலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். உயிரிழந்தவர்களைப் புதைக்கவோ, எரிக்கவோ கூட இடுகாடு இல்லாமல் அவர்களின் உறவினர்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

“இது கொரோனா 2ஆம் அலை அல்ல… கொரோனா சுனாமி”
“இது கொரோனா 2ஆம் அலை அல்ல… கொரோனா சுனாமி”

ஆக்சிஜன் பற்றாக்குறையால் அங்குள்ள மருத்துவமனைகளைத் திண்டாடி வருகின்றன. எய்ம்ஸ் உள்ளிட்ட அதிநவீன மருத்துவமனைகளிலே இது தான் நிலைமை என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் உள்ள மகாராஜா அகர்சென் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்துபோகும் நிலையில் இருக்கிறது. போதுமான ஆக்சிஜன் சப்ளையும் டெல்லி அரசிடம் இருந்து இல்லை. இதையடுத்து, ஆக்சிஜன் சப்ளையை முறையாக வழங்கிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

“இது கொரோனா 2ஆம் அலை அல்ல… கொரோனா சுனாமி”

இந்த மனு நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா இரண்டாவது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டாலும், உயிரிழப்பு குறைவாகத்தான் இருக்கிறது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்போர் உயிரிழக்கின்றனர். ஆனால், அந்த உயிரிழப்பையும் நாம் தடுக்க வேண்டும். சமீபத்தில் கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில், மே மாதம் நடுப்பகுதியில்தான் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடையும் எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை என்று அனைவரும் கூறுகிறார்கள். உண்மையில் இது சுனாமி. இந்த சுனாமி உச்சமடையும் நேரத்தில் அதை எதிர்கொள்ள மத்திய அரசு தேவையான மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன்கள் ஆகியவற்றைத் தயார் செய்ய வேண்டும்” என்றனர். இதையடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க தயார் என்று கூறிய மத்திய அரசு, அனைத்தையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறது.