ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

இப்போது உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி. ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டும் மீண்டும் கொரோனா தாக்குகிறது? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடாமல் தடுப்பூசி பயனற்றது; அதைப் போட்டுக்கொண்டாலும் போடாவிட்டாலும் ஒரு பயனும் இல்லை என்று கூறி எளிதில் கடந்துவிடுகிறோம். குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனா வந்ததைப் பேசும் நாம் மறந்தும் கூட தடுப்பூசியால் ஏராளமானோர் பயனடைந்தது குறித்துப் பேசுவதில்லை.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் 100இல் ஒருவருக்கு கொரோனா மீண்டும் வந்தால் ஒட்டுமொத்த தடுப்பூசியுமே வேஸ்ட் என்று முத்திரை குத்திவிடுகிறோம். அறிவார்ந்தவர்கள் நாம் என்பதால் முடிந்தவரை ஏன் மீண்டும் கொரோனா வருகிறது? எங்கே தவறு நடக்கிறது என்பதை ஆராய்ந்தாலே அதற்கு எளிதில் தீர்வு காணலாம். அறிவியலாளர்களும் மருத்துவர்களும் மீண்டும் கொரோனா வந்தால் பாதிப்பின் தீவிரம் பெரிதாக இருக்காது; தயக்கமில்லாமல் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

தன்னலமற்ற மருத்துவர்களின் தன்னலமில்லாத வேண்டுகோள்

ஒரு மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் ஆர்கே திமான். இவரும் இவரது மனைவியும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்கள். இருப்பினும் இருவருக்கும் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தரான பிபின் புரிக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட 11ஆவது நாள் தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் தடுப்பூசியைப் பயனற்றது என்று சொல்லவில்லை.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!
ஆர்கே திமான்

மாறாக, மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்கள் காரணம் இல்லாமல் அப்படிச் சொல்லவில்லை. கொரோனாவை தடுப்பூசி தான் விரட்டும் என்று உறுதியாக நம்புகிறார்கள். கொரோனா மட்டுமில்லை எந்தவொரு தொற்றும் தடுப்பூசியின் மூலம் தான் ஒழிக்கப்படும். பெரியம்மை, சின்னம்மை, இளம்பிள்ளை வாதம் என வரிசையாக உதாரணம் காட்டலாம். ஆகவே மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!
பிபின் புரி

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனா தொற்று மீண்டும் வருகிறது?

பொதுவாக மருத்துவ உலகில் தொற்று மீண்டும் ஏற்பட்டால் அவற்றை breakthrough cases என்று அழைக்கிறார்கள். இவ்வாறு தொற்று ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தடுப்பூசியைத் தவறான முறையில் கையாளுதலும், அவற்றை மக்களுக்குச் செலுத்துவதிலுள்ள கோளாறுகளுமே முதன்மையான காரணம். உதாரணமாக முறையான அறை வெப்பநிலையில் தடுப்பூசியைப் பாதுகாக்காமல், அந்தத் தடுப்பூசியைப் போடுவதால் உள்ளே சென்று வேலை செய்யாமல் போய்விடுகிறது. இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கு முன்பு தொற்று பரவுவதற்கும் இது தான் காரணம் என்று அடித்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

கொரோனா தடுப்பூசியைச் சரியாக செலுத்தவில்லை என தனது நோயாளிகளிடம் அமெரிக்காவிலுள்ள ஒரு மருத்துவமனை மன்னிப்பு கோரியிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தீர்மானிப்பதில் வயதும் ஒரு காரணியாக இருக்கிறது. இதனால் வயதானவர்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

தடுப்பூசி எத்தனை நாட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்?

இதற்கான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வைரஸ்கள் உருமாற்றம் அடைவது தடுப்பூசியின் செயல்பாட்டைக் குறைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது முதலாவதாக வரும் வைரஸுன் தோற்றத்தைக் கொண்டு அதை அழிக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடித்து நாம் செலுத்துவோம். அந்த வைரஸுக்கு மட்டுமே தடுப்பூசி வேலை செய்யும்.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!

மாறாக வைரஸ் தனது உருவத்தையும் மூலத்தையும் மாற்றும்போது தடுப்பூசி வேலை செய்யாமல் போய்விடுகிறது. தற்போது வந்திருக்கும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தாலும், தனது அடிப்படை அமைப்பான ஸ்பைக் புரதத்தை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகள் சுமார் 9லிருந்து 12 மாதங்களை வரை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்கிறார் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா.

ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா வருகிறது? – உங்கள் கேள்விக்கான பதில் இதோ!
விகே பால்

இந்திய அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் மருத்துவருமான பிகே குப்தா கூறுகையில், மீண்டும் தொற்று ஏற்படும் அனைவருக்குமே லேசான அறிகுறிகளும் சிலருக்கு அறிகுறி இல்லாமலும் இருக்கிறது என்றார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தொற்றின் வீரியம் வெகுவாகக் குறைந்திருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் கொரோனா தடுப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரான விகே பால், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகள் இருந்தாலும், நாம் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.