விட்டு போகாத பாசம்; கமலுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி

 

விட்டு போகாத பாசம்; கமலுக்காக களத்தில்  இறங்கிய கஸ்தூரி

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக , திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சிகள் களத்தில் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வரும் நிலையில் மாற்று கட்சியாக மக்கள் நீதி மய்யம் களமிறங்கியுள்ளது.

விட்டு போகாத பாசம்; கமலுக்காக களத்தில்  இறங்கிய கஸ்தூரி

இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளர் பி.டி. செல்வகுமாரை ஆதரித்து நடிகை கஸ்தூரி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் , மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செல்வகுமார் இந்த தொகுதியில் பல பணிகளை செய்துள்ளார் .நீங்கள் அவரை இழந்து விடக்கூடாது; அவருக்கு வாக்களித்து நன்மையை தேடிக் கொள்ளுங்கள் .அதிமுக-திமுக என்ற இரு திராவிட கழகங்களும் மீண்டும் மீண்டும் ஆட்சி அமைத்து வருகின்றன. இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை .இதுதான் மாற்றத்திற்கான நேரம் .சரியான நபரை தேர்ந்தெடுக்கும் சமயம் இதுதான். ஆளும் கட்சி செய்வது தொழில் அரசியல் .ஆனால் இவர் அப்படி அல்ல ;இவர் ஒரு சமூக சேவகர் .உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள். கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 150 நாட்கள் உணவு வழங்கியுள்ளார் பி.டி. செல்வகுமார். தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவதற்கு முன்னாள் மக்களுக்கு இத்தனை நன்மை செய்த இவர் வெற்றி பெற்று சட்டமன்ற தொகுதி வந்தால் உங்களுக்கு எவ்வளவு நலத்திட்டங்கள் கிடைக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்” என்றார்.

விட்டு போகாத பாசம்; கமலுக்காக களத்தில்  இறங்கிய கஸ்தூரி

தொடர்ந்து பேசிய அவர், “குமரி மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் எம்எல்ஏவாக உள்ளார். அவர் தற்போது இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? தொகுதி பக்கமே வந்தது இல்லை? மாறி மாறி காட்சிகள் தாவித்தாவி தற்போது அவர் திமுகவில் தஞ்சமடைந்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தில் கூட சேர வாய்ப்புள்ளது. நான் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் கிடையாது . மக்கள் நீதி மய்யத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. நான் தனிப்பட்ட முறையில் பி.டி. செல்வகுமார் நல்லவர் அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்க வந்துள்ளேன். மக்களிடம் சமத்துவம் சகோதரத்துவம் பேசக்கூடியவரை நீங்கள் தேர்ந்தெடுத்தால் நன்மைகள் வந்து சேரும் என்பதை கூற இங்கு வந்துள்ளேன்”என்றார்.