’மும்பையை எதிர்த்து யார்?’ ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

’மும்பையை எதிர்த்து யார்?’ ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் ஆவலோடு யாரோடு யார்… எந்த தேதியில் மோதப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

ஐபிஎல் 2020 போட்டிகள் கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்டன. ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதியிலிருந்து போட்டிகள் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

’மும்பையை எதிர்த்து யார்?’ ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதற்கு முன் கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டனர்.

அதன்பின் ஐக்கிய அமீரகம் புறப்பட்டனர். அங்கு வீரர்கள் மற்றவர்களைச் சந்திப்பது முதல் பயிற்சி எடுப்பது வரை பலவித கட்டுபாட்டுகள் விதிக்கப்பட்டன. காரணம் கொரோனா நோய்த் தொற்று வீரர்களுக்குப் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே.

’மும்பையை எதிர்த்து யார்?’ ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

ஆயினும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. வெளிநாட்டிலிருந்து வரும் வீரர்கள் சிலர் வருவதில் சிக்கல் இருந்தது. இதனால், ஐபிஎல் போட்டி அட்டவணை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக வரும் சனிக்கிழமை ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஐபிஎல் விதிகளின் படி, சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியே முதல் போட்டியில் வெல்லும். அதன்படி சென்ற ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணியே. நூலிழையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைத் தவற விட்ட அந்தப் போட்டியை சென்னை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

’மும்பையை எதிர்த்து யார்?’ ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

அதனால், முதல் போட்டியில் மும்பையை எதிர்த்து ஆடப்போவது யார் என்பதுதான் ரசிகர்களின் ஆவல் மிகுந்த கேள்வியாக இருக்கிறது. அநேகமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.