சத்துமாவு கஞ்சியை யாரெல்லாம் குடிக்க கூடாது?

 

சத்துமாவு கஞ்சியை யாரெல்லாம் குடிக்க கூடாது?

இன்றைய செய்தி குறிப்பில் நாம் பார்க்க இருப்பது சத்துமாவு கஞ்சி. சத்துமாவு கஞ்சி எல்லோரும் குடிக்கலாமா ?யார் யார் குடிக்கலாம் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம். அதிக சர்க்கரை நோய் ,அதிக ரத்த கொதிப்பு உள்ளவர்கள் கஞ்சி உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

சத்துமாவு கஞ்சியை யாரெல்லாம் குடிக்க கூடாது?

அதிக சர்க்கரை, அதிக ரத்த கொழுப்பு உள்ள நபர்கள், கஞ்சியாக தேர்ந்தெடுப்பது அத்தனை நல்லதாக அமையாது. அவர்கள் முழு தானியமாகவோ, பொங்கல் ,உப்புமா போன்ற உணவுகளாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது போன்றவர்களுக்கு கஞ்சி என்பது சரியான தேர்வு அல்ல. சிலர் உடல் எடை கூடிக் கூடி விடக்கூடாது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நவதானியக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள் . அவ்வாறு செய்வதும் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல.

சத்துமாவு கஞ்சியை யாரெல்லாம் குடிக்க கூடாது?

ஆனால் குழந்தைகள் , சர்க்கரை வியாதி இல்லாத இளம் வயதினர் , எல்லோருக்குமே நவதானியக் கஞ்சி ஏற்புடைய ஒன்று. இந்த கஞ்சியை யார் எடுத்துக் கொள்ளலாம். யார் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பார்த்தோமேயானால், சர்க்கரை வியாதிக்காரர்கள், தோல் நோய் ,சொரியாசிஸ் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் இதை எடுத்து கொள்வதை தவிர்க்கலாம். சொரியாசிஸ் உள்ளிட்ட தோல் நோய்கள் உள்ளவர்கள் கம்பு, வரகு, சோளம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது . இதை அந்த காலத்தில் கரப்பான் பண்டங்கள் என்று கூறுவார்கள்.இது போன்ற சில சிறு தானியங்கள் தோலில் அரிப்பை உண்டாக்கும். அத்துடன் தோல் வறட்சியை உண்டாக்கும். அதனால் தோல் நோய்கள் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

சத்துமாவு கஞ்சியை யாரெல்லாம் குடிக்க கூடாது?

உடல் மெலிந்த குழந்தைகள், தசை பிடிப்பு இல்லாத குழந்தைகள், களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பவர்களுக்கு சத்துமாவு கஞ்சி மிக சிறப்பான உணவு. இந்த கஞ்சியில் துளி உப்பு சேர்த்து , காரமாகவும் சாப்பிடலாம் அல்லது பனை வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் போட்டு இனிப்பு பானமாகவும் சாப்பிடலாம். சர்க்கரை இல்லாமல் வெறும் பால் விட்டும் கஞ்சி போல் குடிக்கலாம். சத்துமாவு கஞ்சியில் திணை, வரகு அரிசி, சோளம் ,குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் . சத்துமாவு கஞ்சியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதனால் சில குழந்தைகளுக்கு அஜீரணம் , வாய்வு ஏற்படும். இந்த வாய்வு போக சுக்கு, ஏலக்காய் போன்றவற்றையும் சத்துமாவு கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடும் போது, நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும் .