’எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்’ கீர்த்தி சுரேஷ் சொன்னது யாரைத் தெரியுமா?

 

’எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்’ கீர்த்தி சுரேஷ் சொன்னது யாரைத் தெரியுமா?

திரைத்துறை பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். குறிப்பாக, டிவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன் நடிகர் மாதவன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சாமார்த்தியமாகப் பதில் அளித்தார்.

’எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்’ கீர்த்தி சுரேஷ் சொன்னது யாரைத் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் எப்போது தனது போட்டோக்கள், படங்கள் பற்றிய அப்டேட்டுகளை பதிவிட்டு வருபவர். நாளை என்னிடம் கேள்விகள் கேட்கலாம் என நேற்று பதிவிட்டார். கூடவே #AskKeerthy எனும் ஹேஷ்டேக்கையும் கொடுத்திருந்தார்.

இன்று மாலை 5 மணி லைவ் கேள்வி பதிலுக்கு ரெடியானார் கீர்த்தி. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் அநேக கேள்விகளைக் கேட்டது தமிழ் ரசிகர்கள்.

’எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்’ கீர்த்தி சுரேஷ் சொன்னது யாரைத் தெரியுமா?

நீங்கள் சிங்கிளா… கமிட்டடா? என்று கேட்டதற்கு ’வேலையோடு கமிட்டாகியிருக்கிறேன்’ என்று பதில் சொல்லியிருந்தார். பழைய பப்ளி கீர்த்தி எப்போ வருவார் என ஒருவர் கேட்டதற்கு ‘விரைவில்’ என்று கூறியிருக்கிறார்.

பலர் தங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின்களைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்லிக்கேட்டிருந்தனர். ஒருவர், ’அக்கா, உங்களின் விருப்பமான கிரிக்கெட்டர் யார்?’ என்று கேட்டிருந்தார்.

’எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்’ கீர்த்தி சுரேஷ் சொன்னது யாரைத் தெரியுமா?

அதற்கு, ‘தம்பி, நம்ம #7 தான் எப்பவுமே’ என்று பதில் சொல்லியிருந்தார். ஜெர்சியில் 7 -ம் நம்பர் அணிவது தோனி என்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருக்குமே தெரியும். தன் பதிலோடு தோனியையும் டேக் பண்ணியிருந்தார் கீர்த்தி சுரேஷ்.

’எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்’ கீர்த்தி சுரேஷ் சொன்னது யாரைத் தெரியுமா?

அந்தக் கேள்வி மட்டுமே 1.2 ஆயிரம் ரீடிவிட் செய்யப்பட்டும், 5.3 ஆயிரம் லைக்ஸ் கடந்து போய்க்கொண்டிருக்கிறது.