சஞ்சய் மஞ்சரேக்கரின் ஐபிஎல் பட்டியலில் முதல் இடம் எதுக்குத் தெரியுமா?

 

சஞ்சய் மஞ்சரேக்கரின் ஐபிஎல் பட்டியலில் முதல் இடம் எதுக்குத் தெரியுமா?

ஐபிஎல் கொண்டாட்டங்கள் உற்சாகத் தொடங்கிவிட்டன. கொரோனா அச்சம் மிரட்டினாலும் அதையும் எதிர்கொள்ள தயாராகி விட்டனர் அணி வீரர்கள்.

இந்த ஆண்டின் மார்ச் மாத இறுதியில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா நோய்ப் பரவல் காரணாக ஒத்தி வைக்கப்பட்டது. அது தற்போது ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி யன்று தொடங்குகிறது.

சஞ்சய் மஞ்சரேக்கரின் ஐபிஎல் பட்டியலில் முதல் இடம் எதுக்குத் தெரியுமா?

சென்னை அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இருவரும் விலகினர். அதேபோல மற்ற அணிகளிலிருந்து கேன் ரிச்சர்ட்சன், லசித் மலிங்கா உள்ளிட்ட பல வீரர்கள் விலகினர். இதனால் போட்டியின் சுவாரஸ்யம் குறைவதைப் போலவே இருந்தது.

ஆனால், சற்று இடைவெளி விட்டு மீண்டும் ஐபிஎல் பற்றிய செய்திகளும் கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்டன. எந்த அணி வெல்லும் எந்த அணி அதிக ரன் சேர்க்கும் என ஒவ்வொருவரும் யூகித்து வருகின்றனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தனது யூகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

சஞ்சய் மஞ்சரேக்கரின் ஐபிஎல் பட்டியலில் முதல் இடம் எதுக்குத் தெரியுமா?

சஞ்சய் மஞ்சரேக்கர் ஐபிஎல் பட்டியலில் முதல் இடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அளித்துள்ளார். அப்படியெனில் இதுவே இந்த ஆண்டில் கோப்பையை வெல்லும் என்று அவர் கருதுகிறார் அர்த்தம்.

அவர் அளித்த பேட்டியில், மூத்த வீரர்களின் அனுபவமும் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே பலமாகி இருப்பதாக நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் கேப்டன் தோனி இறங்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

சஞ்சய் மஞ்சரேக்கரின் ஐபிஎல் பட்டியலில் முதல் இடம் எதுக்குத் தெரியுமா?

சஞ்சர் மஞ்சரேக்கர் ஐபிஎல் அணிகளின் பட்டியலில், முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாம் இடம், கிங்ஸ் லெவன் ஆஃப் பஞ்சாப், மூன்றாம் இடத்தில் டெல்லி, நான்காம் இடத்தில் மும்பை இண்டியன்ஸ், ஐந்தாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆறாம் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏழாம் இடத்தில் சன்ரைஸ் ஹைதராபாதி, எட்டாம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன.