டேவிட் வார்னரின் மகளுக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

 

டேவிட் வார்னரின் மகளுக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

டேவிட் வார்னர் –  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன். ஒருமுறை ஹைதராபாத் டீம்க்கு ஐபிஎல் கோப்பை வென்று தந்தவர்.  இம்முறையும் வெற்றிக்கான கடும்போராட்டத்தை நிகழ்த்தியவர். இளம் வீரர்களைத் தட்டிக்கொடுத்து வளர்ப்பவர்.

டேவிட் வார்னரின் மகளுக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

வார்னரின் மனைவி கேண்டிஸ். இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவருக்கும் டேவிட் வார்னருக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

வார்னரின் குழந்தைகள் இருவர் சற்று வளர்ந்த பிள்ளைகள். அதனால், அவர்களோடு வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடுவது வார்னரின் வழக்கம். தன் குடும்பம் பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வார்னரின் மனைவி கேண்டிஸ் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

டேவிட் வார்னரின் மகளுக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

வார்னர் – கேண்டிஸ் இணையின் மூத்த மகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் போல ஆட விரும்புகிறாராம். இவர்களின் மகளின் விருப்பமான கிரிக்கெட் வீரர் ஒரு இந்தியர். ஆம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்தைத்தான் வார்னரின் மகள் விரும்பி பார்ப்பாராம். அவரது ஆட்டமே அவருக்குப் பிடிக்குமாம்.

டேவிட் வார்னரின் மகளுக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கும் வார்னருக்கு அவர் வீட்டில் ரசிகர்கள் இல்லை. ஆனாலும். ஆரோன் பின்ச், விராட் கோலி இருவரும் மிக திறமையான வீரர்கள் அதனால் வார்னர் மகிழ்ச்சிதான் அடைந்திருப்பார்.