சட்டமன்ற தேர்தலில் திமுகவின் எதிரி யார்? – கனிமொழி பதில்

 

சட்டமன்ற தேர்தலில் திமுகவின் எதிரி யார்? – கனிமொழி பதில்

தூத்துக்குடி

சட்டமன்ற தேர்தலில் திமுக எதிரியாக சந்திக்கப்போவது அதிமுக மட்டுமல்ல, பாஜகவும் தான் என்று அந்த கட்சி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தூத்துக்குடியில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள கனிமொழி, இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், திமுக இதுவரை பல்வேறு தேர்தல்களை சந்தித்து உள்ளதாகவும், ஆனால் வரும் சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார். தமிழகத்தை ஆண்ட இரு பெரும் தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால், மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் கட்சியினருக்கு அறிவுத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவின் எதிரி யார்? – கனிமொழி பதில்

தொடர்ந்து பேசிய கனிமொழி, வரும் சட்டமன்ற தேர்தலில் நமக்கு அதிமுக மட்டும் எதிரி அல்ல என்றும், மக்களின் உடமை, உரிமைகளை ஆள நினைக்கும் பாஜகவும் தேர்தல் களத்தில் நமக்கு எதிரி தான் என்றும் கூறினார். ஆகையால் கட்சியினர் திமுக ஆட்சியமைக்க கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து திமுகவில் இணைந்த ஏ.ஜே. ஸ்டாலின், தூத்துக்குடி நகரில் வெள்ளநீரை வடிய செய்வதற்காக 3 புதிய மின்மோட்டார்களை, கனிமொழியிடம் வழங்கினார்.