முதல்வர் வேட்பாளர் யார் ? – முடிவான விஷயத்தை ஏற்க வைக்கும் செயற்குழு ?

 

முதல்வர் வேட்பாளர் யார் ? – முடிவான விஷயத்தை ஏற்க வைக்கும் செயற்குழு ?

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதுதான் இன்றைய பிரதான பேச்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏற்கெனவே நிர்வாகிகள் மட்டத்தில் ஒரு முடிவுக்கு வந்த பின்னர், செயற்குழு அதை ஏற்க வைக்கும் வகையில்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் யார் ? – முடிவான விஷயத்தை ஏற்க வைக்கும் செயற்குழு ?

இன்றைய கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எடுக்கக்கூடாது என நிர்வாகிகளுக்கு கூறபட்டுள்ளதாம். கட்சியில் இல்லாதவரை பற்றி கட்சிக் கூட்டத்தில் பேசக்கூடாது என உத்தரவாம்.

முதல்வர் வேட்பாளர் யார் ? – முடிவான விஷயத்தை ஏற்க வைக்கும் செயற்குழு ?

யார் தலைமையில் தேர்தல் என்று முடிவானால், யார் யார் ஒத்துழைப்பு கொடுப்பார்கள், அதிருப்தி தெரிவிப்பவர்கள் யார் என்பது தெரியும் என்றும், கட்டுப்பாடுகளை மீறுவது யார் என்பதும் தெரிந்து விடும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

முதல்வர் வேட்பாளர் யார் ? – முடிவான விஷயத்தை ஏற்க வைக்கும் செயற்குழு ?

தேர்தல் வேலைகளை தொடங்கி நடந்து வரும் நேரத்தில், சசிகலா விடுதலையானால் எந்த சலசலப்பையும் ஏற்படுத்த முடியாது என எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. தென்மாவட்ட அணிகளை உற்சாகப்படுத்த சசிகலா வேண்டும் என ஒரு தரப்பு நினைக்கிறதாம்.

முதல்வர் வேட்பாளர் யார் ? – முடிவான விஷயத்தை ஏற்க வைக்கும் செயற்குழு ?

யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பது ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், இந்த கூட்டம் அதை ஏற்றுக் கொள்ள வைக்கும் கூட்டமாகவே இருக்கும் என்றும் நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.