ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? தமிழருவி மணியன் பேட்டி!

 

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? தமிழருவி மணியன் பேட்டி!

ரஜினி கட்சி தொடங்கியவுடன் காந்திய மக்கள் கட்சி அதனுடன் இணைக்கப்படும் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? தமிழருவி மணியன் பேட்டி!

ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ள நிலையில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு கட்சியின் மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? தமிழருவி மணியன் பேட்டி!

இந்நிலையில் ரஜினியுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், “கட்சியின் பெயர், சின்னம் உட்பட அனைத்தையும் ரஜினிகாந்த் தான் சொல்வார். முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ நாங்கள் தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது. தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும்.ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு மத அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரஜினியின் அரசியல் ஆன்மீக அரசியல்; மற்றவர்கள் விமர்சிக்கும் அரசியல் அல்ல. மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்கும் அரசியலை ரஜினிகாந்த் முன்னெடுக்கவில்லை. பாதிப்பில்லை என அரசியல் கட்சிகள் கூறுவது அவர்களுக்கு பாதிப்பு இருப்பதையே காட்டுகிறது . திமுக, அதிமுகவின் தவறுகளை பேசி மக்களிடம் சென்று சேர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ரஜினி கட்சி தொடங்கியவுடன் காந்திய மக்கள் கட்சி அதனுடன் இணைக்கப்படும்” என்றார்.