திமுக ஆட்சியமைத்தால் சபாநாயகர் இவர் தானாமே? – அடிபடும் முன்னாள் ‘பெண்’ அமைச்சரின் பெயர்!

திமுக ஆட்சியமைத்தால் சபாநாயகர் இவர் தானாமே? – அடிபடும் முன்னாள் ‘பெண்’ அமைச்சரின் பெயர்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்புகள் அனைத்துமே சொல்லிவைத்தாற் போல ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறின. இதனால் அடிமட்ட தொண்டர்களிலிருந்து அறிவாலயம் வரை அனைவரும் படு குஷியுடன் உள்ளார்கள். தேர்தலுக்குப் பின் ஐபேக் நடத்திய கள ஆய்வின்படி திமுக 180 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என பிரசாந்த் கிஷோர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.

திமுக ஆட்சியமைத்தால் சபாநாயகர் இவர் தானாமே? – அடிபடும் முன்னாள் ‘பெண்’ அமைச்சரின் பெயர்!

அடுத்தது நாம் தான் என்ற உத்வேகத்துடன் அமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியும், துறை செயலாளர்களாக எந்த அதிகாரிகளை நியமிக்கலாம் என்றும் அறிவாலய தரப்பில் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். ஸ்டாலினும் பேட்டிகளில் மே 2ஆம் தேதி புதிய அரசு அமையப் போகிறது என்பதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார். இச்சூழலில் சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்ற புதிய யோசனைகளும் அறிவாலயத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறதாம்.

திமுக ஆட்சியமைத்தால் சபாநாயகர் இவர் தானாமே? – அடிபடும் முன்னாள் ‘பெண்’ அமைச்சரின் பெயர்!

அதில் டாப் லிஸ்டில் இருப்பவர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் பெயர் தானாம். சமீப நாட்களாக அவரது பெயரைப் படிக்காமல் தேர்தல் குறித்தான செய்திகளைக் கடந்திருக்க முடியாது. ஏனெனில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்தார். வேட்பாளர்களை நேர்காணல் காணும் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். கட்சியில் சீனியர் என்பதால் இந்த முறை அவருக்கு அதிக முக்கியத்துவத்தை ஸ்டாலின் அளித்திருந்தார். இதனால் அவரே சபாநாயகராக கட்சித் தலைமையால் டிக் அடிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவ்வாறு சபாநாயகராக அவர் அறிவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் நிரந்தர பெண் சபாநாயகர் என்ற அந்தஸ்து சுப்புலட்சுமிக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சியமைத்தால் சபாநாயகர் இவர் தானாமே? – அடிபடும் முன்னாள் ‘பெண்’ அமைச்சரின் பெயர்!

சுப்புலட்சுமி தற்போது மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளரான சி.சரஸ்வதி என்பவர் களம் காண்கிறார். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் சுப்புலட்சுமியே வெற்றிமுகத்தில் இருக்கிறார். அங்கு சுப்புலட்சுமி ஈஸியாக வெற்றிபெற்று விடுவார் என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள். 1977ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சுப்புலட்சுமி, அந்தாண்டு தேர்தலில் மொடக்குறிச்சியில் வெற்றிபெற்று ஜவுளித் துறை அமைச்சரானார். அதன்பின் திமுகவில் இணைந்த அவர் 1989ஆம் ஆண்டு திமுக சார்பில் ஈரோட்டில் களம் கண்டு வெற்றிபெற்றார்.

திமுக ஆட்சியமைத்தால் சபாநாயகர் இவர் தானாமே? – அடிபடும் முன்னாள் ‘பெண்’ அமைச்சரின் பெயர்!

சமூக நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக பதவி வகித்தார். இதேபோலா ஆட்சியிலும் கட்சியிலும் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த சுப்புலட்சுமி தற்போது துணைப் பொதுச்செயலாளராகவும் உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.