கூகுள் டூடுலில் இன்று இடம்பெற்றது யார் தெரியுமா ?

 

கூகுள் டூடுலில் இன்று இடம்பெற்றது யார் தெரியுமா ?

கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி பக்கத்தில் அவ்வப்போது சில டூடுல் படங்களை வெளியிட்டு வருகிறது. புகழ்பெற்றவர்கள், பிரபலங்கள்,சமூகத்துக்கான உழைத்தவர்கள், முக்கியமான திரை நட்சத்திரங்களின் படங்களை வெளியிட்டு அவர்களது நினைவுகளை போற்றி வருகிறது.

அந்த வகையில் இன்று டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ள பிரபலம் யார் என தெரிகிறதா? கூகுள் டூடுலில் இன்று இடம் பெற்றவர், புகழ் பெற்ற பொருளாதார அறிஞரும், பேராசிரியருமான டாக்டர் சர். ஆர்தர் லூயிஸ் என்பவர்தான் இன்று கூகுள் டூடுலில் இடம்பெற்றுள்ளார். டூடுல் வெளியிட்டுள்ள இந்த படத்தை வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் கமில்லா ரூ . அந்த படத்தைத்தான் டூடுல் வெளியிட்டுள்ளது .

கூகுள் டூடுலில் இன்று இடம்பெற்றது யார் தெரியுமா ?

கருப்பினத்தவரான பேராசிரியர் லூயிஸ், 1979ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பொருளாதார ஆய்வுகள் வளரும் நாடுகளை அடிப்படையாக கொண்டவையாகும். ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் .

பிரிட்டன் காலனி நாடான செயின் லூசியாவில் பிறந்த அவர், ஆண்டிகுவா நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர். அந்த நாட்டில் ஆரம்ப கல்வி கற்றதுடன், லண்டன் பொருளாதார பள்ளியில் பட்டம் பெற்றவர். அங்கு பட்டம் பெற்ற முதல் கருப்பர் ஆர்தர் லூயிஸ்தான். அதன்பின்னர் பிரிட்டனின் முக்கிய பல்கலைக்கழகமான மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினர். அங்கு பேராசிரியராக பணியாற்றிய முதல் கருப்பினத்தவர் லூயிஸ்தான். அந்த பல்கலைக் கழகத்தில் முதன் முதலில் கருப்பர் பெயரில் ஆய்வு இருக்கை அமைந்ததும் அவர் பெயரில்தான். அதன்பின்னர் அமெரிக்காவில் 20 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி, 1983ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அங்கிருந்தபடியே வளரும் நாடுகளில் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கைகளை வகுத்தவர்.

கூகுள் டூடுலில் இன்று இடம்பெற்றது யார் தெரியுமா ?

புதிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்காற்றியவர் . ஐரோப்பிய காலனி நாடுகளில் சுதந்திர விடுதலைக்கு முக்கிய பங்காற்றியவர். ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் தீவுகளின் பல்கலைக்கழகங்களில் இவரது பங்களிப்பு முக்கியமானதாகும்.

வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றினார். கிழக்கிந்திய நாடுகளில் சுதந்திரத்துக்கு பின்னர் முதல் பொருளாதார ஆலோசகராக நியமிக்கபட்டவர். அந்த நாடுகளின் முதல் ஐந்தாண்டு கொள்கையை வகுத்தவர் இவர்தான். இப்படி பல சிறப்புகளை கொண்ட கருப்பின பேராசிரியர் சர் ஆர்தல் லூயிஸ் நோபல் பரிசு பெற்றதை கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.