இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? சுப்பிரமணியன் சாமி கேள்வி!

 

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? சுப்பிரமணியன் சாமி கேள்வி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி விமர்சித்துள்ளார்.

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? சுப்பிரமணியன் சாமி கேள்வி!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி சோதனை இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் ஒத்திகை தொடங்கியிருக்கிறது. தடுப்பூசி செலுத்துதல் குறித்து திட்டமிடல், மதிப்பிடுதல், சவால்களை அடையாளம் காணுதலுக்காக இந்த சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்று 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது காலை 8.30 மணி முதல் தொடங்கிய ஒத்திகை காலை 10.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? சுப்பிரமணியன் சாமி கேள்வி!

96 ஆயிரம் பேரை ஒத்திகை பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 2360 பேருக்கு தேசிய அளவில் பயிற்சி தரப்பட்டு உள்ளது. 57 ஆயிரம் பேருக்கு மாவட்ட அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு மையத்திலும் 25 பேருக்கு டம்மி தடுப்பூசி போடப்படும். அதன்படி இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு போட முடியுமா என்பதற்காக இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்காத நிலையில், ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.