அமெரிக்கத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு? – அதிர வைக்கும் சர்வே முடிவு

அமெரிக்கத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு? – அதிர வைக்கும் சர்வே முடிவு

உலகின் அனைத்து நாடுகளில் தேர்தல் நடந்தால், வாக்கு எண்ணிக்கை நாளில்தான் மீடியாக்களில் செய்திகள் அதிகம் வரும். ஆனால், அமெரிக்காவில் தேர்தல் எனில் தேர்தல் தேதி அறிவித்தது முதல் ஒவ்வொரு செய்தியே பேசுபொருளாகி விடும்.

அமெரிக்கத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு? – அதிர வைக்கும் சர்வே முடிவு

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  

ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

அமெரிக்கத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு? – அதிர வைக்கும் சர்வே முடிவு

அமெரிக்கத் தேர்தலில் டிரம்பின் கொரோனா கால நடவடிக்கைகள் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட்டன. இவ்வளவு அலட்சியமாக பெருந்தொற்று நோயைக் கையாளலாமா? என்று டிரம்புக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. அதற்காக தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்பாவது கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டிரம்ப்.

அமெரிக்காவில் 45 லட்சம் பேர் அமெரிக்க வாழ் இந்தியர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் யாருக்கு என்ற விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அமெரிக்கத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு? – அதிர வைக்கும் சர்வே முடிவு

இந்நிலையில் சமீபத்தில் வெளியான சர்வே ஒன்றில், அமெரிக்க வாழ் இந்தியர்களில் 66 சதவிகிதம் பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனை ஆதரிப்பதாகத் தெரிவிக்கிறது. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு 28 சதவிகித ஆதரவே இருக்கிறதாம்,

ட்ரம்பின் செயல்பாடுகள் மீதான அதிப்தியும் அமெரிக்க இந்தியரான கமலா ஹாரிஷை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததும் ஜோ பிடனுக்கு ஆதரவைக் குவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.