அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன? ஜெயக்குமார் ஏற்படுத்திய சலசலப்பு

 

அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன? ஜெயக்குமார் ஏற்படுத்திய சலசலப்பு

எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து முடிவுகளை எடுத்திருக்கலாம். அது அவர்கள் விருப்பம் என்று தனித்து போட்டியிடும் பாமகவின் முடிவு குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து.. என்று ஜெயக்குமார் யாரை சொல்கிறார்? அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன?என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.

அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன? ஜெயக்குமார் ஏற்படுத்திய சலசலப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6, 9 தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் பங்கேற்றனர். இதன்பின்னர் கட்சியின் வளர்ச்சி கருதி பாமக தனித்து போட்டியிடுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன? ஜெயக்குமார் ஏற்படுத்திய சலசலப்பு

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக திடீரென்று தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் நிலையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் ராமதாஸ் பேசிய கருத்துக்கள் சில வெளிவந்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கவில்லை. பாமகவால் தான் அவர்களுக்கு நன்மையே தவிர அவர்களால் பாமக எந்த பலனும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மேலும் அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அவர் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன? ஜெயக்குமார் ஏற்படுத்திய சலசலப்பு

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போது, கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு. தேவையெனில் போட்டுக்கொள்வோம். தேவை இல்லை எனில் கழற்றி வைத்துவிடுவோம். பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பியும் அதிமுக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமகவின் இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்துப் போட்டியிடுவதால் பாமகவுக்குத்தான் இழப்பே தவிர அதிமுகவுக்கு இழப்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

எங்கள் கூட்டணியில் நீடிப்பது இல்லை வேண்டாமா என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உண்டு. ஆனால் எங்கள் கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்ன ஜெயக்குமார், இதே நிலை தொடர்ந்தால் நாங்களும் விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று, அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை ராமதாஸ் பேசியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன? ஜெயக்குமார் ஏற்படுத்திய சலசலப்பு

அவர் மேலும், பாமக வெளியேறியது குறித்து, எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து முடிவுகளை எடுத்து இருக்கலாம் . அது அவர்களுடைய விருப்பம். ஆனால் அதை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதற்காக எங்கள் கட்சியை பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை காட்டமாக சொல்கிறார் ஜெயக்குமார். இதனால், எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து.. என்று ஜெயக்குமார் யாரை சொல்கிறார் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.