வ.உ.சி மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த வெள்ளை பூசணிக்காய்

 

வ.உ.சி மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த வெள்ளை பூசணிக்காய்

ஆயுத பூஜையை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு வெள்ளை பூசணிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை ஒட்டி, ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று சத்தியமங்கலம், தாளவாடி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வெள்ளை பூசணிக்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆயுத பூஜை அன்று நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி சுற்றுவதற்கு வெள்ளை பூசணிக்காயை அதிகளவு பயன்படுத்துவார்கள். இதனால் இன்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளை பூசணிக்காயை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு கிலோ வெள்ளை பூசணிக்காய் .20 ரூபாய்க்கு விற்பனையானது.

வ.உ.சி மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த வெள்ளை பூசணிக்காய்


அதேபோல் பொரி, அவல், கடலை, நாட்டு சர்க்கரை, தேங்காய், பழம், வாழை இலை போன்றவற்றின் வியாபாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.