இந்தியாவின் மோசமான மொழி எது? கூகுள் சொன்ன பதிலால் கொந்தளித்த மக்கள்!

 

இந்தியாவின் மோசமான மொழி எது? கூகுள் சொன்ன பதிலால் கொந்தளித்த மக்கள்!

கூகுள் ஒரு தேடுதளம். இதில் நமக்குத் தெரியாத பல விஷயங்களை தேடி அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம். எந்த ஒரு கேள்வி மனதில் எழுந்தாலும் உடனே நம்மில் பலர் சென்று தேடுவது கூகுளில் தான். அந்த அளவிற்கு கூகுள் இணையவாசிகளின் நண்பனாக மாறியுள்ளது.

இந்தியாவின் மோசமான மொழி எது? கூகுள் சொன்ன பதிலால் கொந்தளித்த மக்கள்!

இந்த சூழலில் இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடிய போது அதற்கு பதில் கன்னடம் என்று வந்துள்ள. து இதை அறிந்த கன்னடம் பேசும் மக்கள் பலர் ஆவேசமடைந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தனர். அத்துடன் கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி இதற்கு கண்டனம் தெரிவித்துடன், இதுகுறித்து மன்னிப்பு கேட்கவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்தியாவின் மோசமான மொழி எது? கூகுள் சொன்ன பதிலால் கொந்தளித்த மக்கள்!

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் கூகுள் நிறுவனம் இது குறித்து மன்னிப்பு கேட்டுள்ளது. கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் கன்னட மொழி தொடர்பான கூகுள் தேடுதளத்தில் தவறான வெளியான பதிவுகளையும் நீக்கியுள்ளது.