கமல் ஹாசன் போட்டியிடும் தொகுதி எது? மகேந்திரன் பதில்!

 

கமல் ஹாசன் போட்டியிடும் தொகுதி எது? மகேந்திரன் பதில்!

சட்டப்பேரவை தேர்தலில் கமல் ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

கமல் ஹாசன் போட்டியிடும் தொகுதி எது? மகேந்திரன் பதில்!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – திமுக கட்சிகளின் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், மதிமுக, விசிக,கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன . அதேபோல் அதிமுகவில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு எதிராக இந்த தேர்தலில் மூன்றாவது அணிஉருவாகியுள்ளது. இதில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கமல் ஹாசன் போட்டியிடும் தொகுதி எது? மகேந்திரன் பதில்!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” எந்த தொகுதியில் வேண்டுமானாலும் கமல் ஹாசன் போட்டியிடலாம். அவர் 234 தொகுதியிலும் நிற்க வேண்டும் என்று கூட தொண்டர்கள் விரும்பலாம். இன்னும் சில நாட்களில் கமல் ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது தெரியவரும். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.