ஓஹோ… அப்பத்தான் வெள்ளை மாளிகையை காலி செய்வீர்களா ட்ரம்ப்?

 

ஓஹோ… அப்பத்தான் வெள்ளை மாளிகையை காலி செய்வீர்களா ட்ரம்ப்?

அமெரிக்காவில் தேர்தல் முடிந்தும் இன்னும் அதிபர் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் போட்டியிட்ட ஜோ பைடனை எதிர்த்து நின்றார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப். பலரும் கணித்ததுபோலவே ஜோ பைடன் அதிரடி வெற்றி பெற்றார்.

ஆனால், ட்ரம்ப் இந்தத் தேர்தலில் குளறுபடிகள் நடந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றம் சென்றார். ஜியார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் வென்றது மறுபடியும் உறுதிபடுத்தப்பட்டது. அதனால், தன் நிலையிலிருந்து கீழிறிங்கி வந்தார் ட்ரம்ப். அதிகார மாற்றங்கள் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருவதாகச் சொன்னார்.

ஓஹோ… அப்பத்தான் வெள்ளை மாளிகையை காலி செய்வீர்களா ட்ரம்ப்?

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதைபோல மீண்டும் ட்ரம்ப் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். அமெரிக்க அதிபர் தங்கியிருப்பதே வெள்ளை மாளிகை. இப்போதுவரை ட்ரம்ப்தான் அதிபர் என்பதால், அங்கிருக்கிறார். எப்போது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், ‘தேர்வு குழு இறுதியாக அதிபர் யார் எனத் தேர்வு செய்ததும்தான் வெளியேறுவேன்’ என்று சொல்லியுள்ளார்.

ஓஹோ… அப்பத்தான் வெள்ளை மாளிகையை காலி செய்வீர்களா ட்ரம்ப்?

அமெரிக்க தேர்தல் முடிவு என்பது வித்தியாசமானது, ஒவ்வொரு மாகாணத்திற்கு இத்தனை எலக்ட்ரால் காலேஜ் வாக்குகள் என உள்ளன. அந்த மாகாணத்தில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சிக்கு அம்மாகணத்திற்கு உள்ள எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் சென்றுவிடும்.

ட்ரம்ப் பிடிவாதம் பிடித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சொன்ன பென்சில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய மாகாணங்களில் ஜோ பைடன் வென்றது மறுபடியும் உறுதியானது. அதன்படி, அதிபராக 270 வாக்குகள் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எலெக்ட்ரால் காலேஜ் வாக்காளர்களே அதிபரைத் தேர்தெடுக்க வேண்டும். அதற்கான வாக்கெடுப்பு டிசம்பர் 14-ம் தேதி நடக்க உள்ளது.

ஓஹோ… அப்பத்தான் வெள்ளை மாளிகையை காலி செய்வீர்களா ட்ரம்ப்?

ஜோ பைடனுக்கு தற்போதைய நிலவரப்படி 306 வாக்குகள் இருக்கின்றன. ட்ரம்ப்க்கு 232 வாக்குகளே உள்ளன. இந்நிலையில் அந்தத் தேர்வு குழு யார் அதிபர் எனத் தேர்வு செய்தபின்பே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அடம்பிடிக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.