ரஷ்ய கொரோனா தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும்?

 

ரஷ்ய கொரோனா தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும்?

உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் கொரோனா. ஆம், சீனாவில் தொடங்கிய கொரொனாவின் பயணம் ஓராண்டுக்கும் மேலாக உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் 15 லட்சத்தை நெருங்கிவிட்டது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 560 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 49 லட்சத்து 42 ஆயிரத்து 114 நபர்கள்.

ரஷ்ய கொரோனா தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும்?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,84,04,091 பேர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலைக்கு உலகம் வந்துவிட்டது. அமெரிக்காவில் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்த பிரிட்டன் அனுமதி அளித்துவிட்டது. ஆனால், முதன்முதலாகக் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்திய ரஷ்யாவின் தடுப்பூசி என்ன நிலையில் இருக்கிறது என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

ரஷ்ய கொரோனா தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும்?

ஸ்புட்னிக் V எனும் பெயரிடப்பட்டுள்ள ரஷ்யாவின் தடுப்பூசி, இன்னும் பத்து நாட்களில் பொதுமக்களின் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கு அளிக்கலாம் என்ற பரிந்துரை இருக்கிறது. மேலும், குழந்தைகளோடு பணியாற்றும் வாய்ப்புகள் இருப்பதால் ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போடப்பவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

ரஷ்யாவின் தற்போதைய திட்டப்படி ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பு மருந்தை உலகம் முழுவதும் விநியோகிக்க ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பணிகளை விரைவில் தொடங்குவார் என்றே தெரிகிறது.