’’இனி எப்போது கேட்பேன்; கேட்கவே முடியாதா?’’ – இயேசுதாஸ் உருக்கம்

’’இனி எப்போது கேட்பேன்; கேட்கவே முடியாதா?’’ – இயேசுதாஸ் உருக்கம்

இளையராஜா, பாரதிராஜா என்று எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு நெருக்கமான பலரும் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வந்த நிலையில், எஸ்.பி.பி.க்கு மிகவும் நெருக்கமான இயேசுதாஸ் ஏன் இன்னமும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று, நமது ‘டாப் தமிழ் நியூஸ்’இணையத்தில், இயேசுதாஸ் எங்கே? ஏன் மவுனம்? என்று நேற்று மாலையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

’’இனி எப்போது கேட்பேன்; கேட்கவே முடியாதா?’’ – இயேசுதாஸ் உருக்கம்

இன்றுகாலையில் எஸ்.பி.பி. நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வீடியோ வடிவில் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார் இயேசுதாஸ்.

அதில், ‘’பாலுவும் நானும் சொந்த சகோதரர்கள் மாதிரி இருந்துட்டு வந்தோம். எங்கள் இருவரையும் ஒரு அம்மா பெற்றெடுக்கவில்லை என்றாலும், இசைத்தாயின் மகன்களாக இருந்து வந்தோம். இசைத்தாய்க்கு மகனாக தன் கடமையை பாலுதான் என்னைக்காட்டிலும் அதிகம் செய்திருக்கிறார்.

’’இனி எப்போது கேட்பேன்; கேட்கவே முடியாதா?’’ – இயேசுதாஸ் உருக்கம்

‘அண்ணா எப்படி இருக்கீங்க?’என்று கேட்பார் பாலு. அந்த வார்த்தை இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். என் ஆயுள் உள்ள வரைக்கும் ‘அண்ணா’ என்ற பாலுவின் வார்த்தையை என்னால் மறக்க முடியாது.

’’இனி எப்போது கேட்பேன்; கேட்கவே முடியாதா?’’ – இயேசுதாஸ் உருக்கம்

‘அண்ணா’ என்று பாலு அழைப்பதை இனி எப்போது கேட்பேன். இனி கேட்கவே முடியாதா என்று நினைக்கிறபோது என் மனம் தாங்கவில்லை.

என் ஆத்மார்த்த நண்பரும், சகோதரரும் மறைந்துவிட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’’என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.