ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் விற்பனையைத் தொடங்கும் தேதி?

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில்  ஆன்லைன் விற்பனையைத் தொடங்கும் தேதி?

ஆப்பிள் மொபைல், லேப்டாப் வாங்குவது பலரின் கனவாகக் கூட இருக்கலாம். அந்தளவுக்கு அதன் தரத்திலும் விலையிலும் அதிகம் உள்ளது. இதுவரையில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை அமேசான் போன்ற வேறு ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாகவே இந்தியாவில் வாங்கி வருகிறோம்.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடியாக ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்கான தேதியை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ டிம் குக் அறிவித்திருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில்  ஆன்லைன் விற்பனையைத் தொடங்கும் தேதி?
Tim cook – apple ceo

இந்தியாவில் தனது முதல் ஆன்லைன் விற்பனையை செப்டம்பர் 23 –ம் தேதி தொடங்க இருப்பதாக டிம் குக் அறிவித்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பால் நேரடியாகக் கடைகளில் சென்று பொருள்கள் வாங்குவது குறைந்துகொண்டே வருகிறது. அதற்குப் பதிலாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிகரித்துவிட்டது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில்  ஆன்லைன் விற்பனையைத் தொடங்கும் தேதி?

ஆன்லைன் சேல்ஸ் நிறுவனங்களும் உள்ளூர் செய்த்தித்தாள், தொலைக்காட்சிகளும் அதிக செலவு செய்து விளம்பரங்கள் கொடுப்பதைப் பார்க்கிறோம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. அதனால் அனைத்து ஆன்லைன் நிறுவனங்களும் தள்ளுபடி அறிவிக்கும் வேலைகளில் மும்முரமாய் உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில்  ஆன்லைன் விற்பனையைத் தொடங்கும் தேதி?

ஆப்பிள் நிறுவனமும் தீபாவளி விற்பனையில் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவரவே நேரடியாக இந்தியாவில் ஆன்லைன் விற்பனைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம் என்பதால இந்தியாவில் ஆன்லைன் விற்பனையைத் தொடங்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.