திமுக பதவியேற்கும் போது பாதிப்பு 26 ஆயிரமாக இருந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

திமுக பதவியேற்கும் போது பாதிப்பு 26 ஆயிரமாக இருந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. திமுக அரசு பதவியேற்கும் போதே பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இக்கட்டான காலக்கட்டத்தில் ஆட்சிக்கு வந்திருந்தாலும், திமுக அரசு தொய்வின்றி செயல்பட்டது. பேரிடரிலிருந்து மக்களை காத்து இயல்பு நிலையை மீட்டெடுக்க முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் விளைவாக, தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.

திமுக பதவியேற்கும் போது பாதிப்பு 26 ஆயிரமாக இருந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த நிலையில், திமுக பதவியேற்கும் போதே பாதிப்பு 26 ஆயிரமாக இருந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதிப்பு தற்போது 8 ஆயிரமாக குறைந்துள்ளது. நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போடும் அளவிற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி போடப்பட்ட நகரம் சென்னை தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது தமிழகத்தில் 5.50 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இன்று மாலை 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவிருக்கிறது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் தொய்வின்றி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.