கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

 

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

உலகமே ஒரு சொல்லைக் கண்டு பயப்படுகிறது என்றால், அது கொரோனா என்பதுதான். அந்தளவுக்கு பேரச்சத்தை விளைவித்து, பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 888 பேர். ரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 59 ஆயிரத்து 093 பேர்.

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 19 லட்சத்து 05 ஆயிரத்து 975 நபர்கள். சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று தணிந்து வருகிறது என்றாலும், பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசியை எதிர்பார்த்து அனைத்து நாடுகளும் காத்து கிடக்கின்றன. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்ததாக அறிவித்து, பதிவும் செய்துவிட்டது. அம்மருந்தின் நம்பகத்தன்மைக்காக தம் மகளுக்கே செலுத்த சொன்னார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின்.

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

பல்வேறு நாடுகளும் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அவற்றில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒன்று. எடி 15, கோ 2.5 என்றும் பெயரில் தடுப்பூசி சோதனையில் உள்ளது. வேகமாக நடைபெற்று வந்த சோதனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, தற்காலிகமாக பரிசோதனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் உலக சுகாதார மாநாட்டில், ஜான்சன் அண்ட் ஜான்சன் சார்பில் கலந்துகொண்ட நிர்வாகி, ‘விரைவில் பரிசோதனைகள் தொடரும். எமர்ஜென்சி தேவைக்கு வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.