+2 பொதுத்தேர்வு எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

 

+2 பொதுத்தேர்வு எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

+2 பொதுத்தேர்வு எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகியுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிப்போனது. மே 3 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா அதிகரித்து வந்ததால் தேதி குறிப்பிடாமல் தமிழக அரசு 12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்தது. இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கொரோனா குறைந்த பிறகு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அதேசமயம் பள்ளிகளிலேயே தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

+2 பொதுத்தேர்வு எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். முதலமைச்சர் உடனான ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.