இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவடையும்? – சுகாதார அமைச்சக அதிகாரிகள் கணிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவடையும்? – சுகாதார அமைச்சக அதிகாரிகள் கணிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவடையும்? என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவடையும்? அதற்கு இதுவரை திட்டவட்டமான பதில் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவல் முடிவடையக் கூடும் என்று சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவடையும்? – சுகாதார அமைச்சக அதிகாரிகள் கணிப்பு

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஜெனரல் (பொது சுகாதாரம்) துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் அனில் குமார் கூறுகையில், இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடையும் என்றார். நாட்டில் 1,20,406 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1,19,293 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். நாட்டில் கொரோனாவால் 6929 பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 2,46,628 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.