கொரோனா எப்போது முடிவுக்கு வரும்?

 

கொரோனா எப்போது முடிவுக்கு வரும்?

கடந்த 10 மாதங்களாக உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா எனும் வைரஸ் நோய். தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உலகம் முழுவதும் 41 கோடிக்கும் மேலாகவும், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 7 கோடிக்கும் மேலாகவும், தமிழகத்தில் 7.5 லட்சத்திற்கும் மேலாகவும் இருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்திற்குப் போன கொரோனா பாதிப்பு இந்த அக்டோபர் மாதம் முதல் அவ்வப்போது தாக்கம் குறைந்து வருகிறது.

கொரோனா எப்போது முடிவுக்கு வரும்?

இதனிடையே கொரோனாவை ஒழிக்க தமிழக அரசு மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பதிப்பு முடிவடைந்து எப்போது நிம்மதி பெருமுச்சு விடலாம் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் எப்போது முடிவுக்கு வரும்? என அறிவியலாளர்கள், கணித மேதைகள், தொழிநுட்ப வல்லுனர்கள் என ஒரு குழுவினர் ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை சொல்லி இருக்கிறார்கள்.

கொரோனா எப்போது முடிவுக்கு வரும்?

இதன் படி வருகிற 2021 பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் கொரோனா அலை 90 சதவீதத்திற்கும் மேல் குறையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த ஆண்டு முடிவில் டிசம்பருக்குள் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்குள் அடங்கி விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. மக்கள் இன்னும் நல்ல ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.