பள்ளிகள் திறப்பில் முதல்வர் முடிவு இதுதானா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!

பள்ளிகள் திறப்பில் முதல்வர் முடிவு இதுதானா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து முதலமைச்சரிடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

பள்ளிகள் திறப்பில் முதல்வர் முடிவு இதுதானா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கல்வி நிறுவனங்களை திறந்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தொற்று ஏற்பட வில்லை என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பில் முதல்வர் முடிவு இதுதானா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!

இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க கோரிக்கை வலுத்து வந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதனடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

பள்ளிகள் திறப்பில் முதல்வர் முடிவு இதுதானா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!

ஆனால் பள்ளிகள் திறப்பில் பெற்றோர்களும் , மாணவர்களும் ஆர்வமாக இருப்பதால் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதன்பின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.