10 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

 

10 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

10 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தற்போது குறைய தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள், திறக்கப்பட்டது. அதேபோல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கருதி பள்ளிகளை திறந்ததாக அறிவித்த தமிழக அரசு, விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவித்தது.

10 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ” தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவீசுவது வழக்கம் தான். ஆனால் முதல்வர் பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே விவசாய கடனை ரத்து செய்து விட்டார். 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தேர்தல் தேதி வந்தவுடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். 12 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்” என்றார்.