வாட்ஸ்அப் – பயனர்களை ஈர்க்கும் புதிய வால்பேப்பர்கள்!

 

வாட்ஸ்அப் – பயனர்களை ஈர்க்கும் புதிய வால்பேப்பர்கள்!

அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் தவிர்க்க முடியாத அத்தியாவசிய செயலியாக உள்ளது வாட்ஸ் அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு செயலியாக வாட்ஸ்அப், தொடர்ச்சியாக பல வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

வாட்ஸ்அப் – பயனர்களை ஈர்க்கும் புதிய வால்பேப்பர்கள்!

வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது, பல புதுப்புது வசதிகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், தனிப்பட்ட சாட்களை அழிக்கும் வசதியை ஒரு மணி நேரம் வரை நீட்டித்தது. ஆப்லைனில் இருந்தபடியே சாட் செய்யும் வசதியும் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதன்மூலம் நாம் ஆன்லைனின் இருக்கிறோம் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை தடுக்க முடியும். இந்த நிலையில், எமோஜி சேவைகளிலும் வாட்ஸ்அப் புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் எமோஜி மூலம் தங்கள் விரும்பியவர்களுடன் சாட்டிங்கில் ஈடுபடலாம். இதற்கு முன், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, ”வீட்டில் இருப்போம்” என பாதுகாப்பு எமோஜியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் – பயனர்களை ஈர்க்கும் புதிய வால்பேப்பர்கள்!

தற்போது புதிய வசதியாக, இயற்கை காட்சிகளைக் கொண்ட பல வால்பேப்பர்களை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, வால்பேப்பர்களை தேர்வு செய்து கொள்ளலாம். விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்வதன் மூலம், யாரோடு சாட் செய்கிறோம் என்கிற அடையாளம் வைத்துக் கொள்ளலாம் என வாட்ஸ்அப் தெரிவிக்கிறது. ஏற்கெனவே போன் பேட்டரியை சேமிக்கும் விதமாக, டார்க் மோட், லைட் மோட் என்கிற வசதியை அளித்திருந்தது. அந்த வசதியை, இந்த வால்பேப்பர்களுக்கும் பயன்படுத்த முடியும். இதன்மூலம் பயனர்கள் தேவைக்கு ஏற்ப இரவில் லைட் மோடு, பகலில் டார்க் மோடு என மாற்றிக் கொள்ள முடியும். வாட்ஸ்அப் செயலி 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த பல வசதிகளால், வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.