“உங்கள் வாட்ஸ் அப் குரூப் சாட்களை கூகுள் வழியாக யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்” : பகீர் ரிப்போர்ட்!

“உங்கள் வாட்ஸ் அப் குரூப் சாட்களை கூகுள் வழியாக  யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்” :  பகீர் ரிப்போர்ட்!

வாட்ஸ் அப் குரூப் என்பது அனைவரது போனிலும் இருக்கும். அதாவது ஒரு நபர் குடும்பம், அலுவலகம், நண்பர்கள் வட்டாரத்துடன் பேச, மெசேஜ் செய்ய ஏதேனும் ஒரு குரூப்பிலாவது இருப்பார். அப்படி இருக்கும் குரூப்பில் திடீரென்று மூன்றாம் நபர் சேரும்போதும் அல்லது நாம் பேசும் சாட்களை நமக்கே தெரியாமல் கவனித்து வந்தாலோ எப்படி இருக்கும்? ​​அந்த பிரச்சினை தான் தற்போது வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது.

“உங்கள் வாட்ஸ் அப் குரூப் சாட்களை கூகுள் வழியாக  யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்” :  பகீர் ரிப்போர்ட்!

ஒரு ஆப் பயன்படுத்தினால் எல்லாவற்றையும் விட தனியுரிமை பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த தனியுரிமை பாதுகாப்பு தற்போது வாட்ஸ் அப்பில் கேள்வி குறியாகியுள்ளது. அதாவது வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் குழுவின் பெயர் போன்ற தகவல்கள் தெரிந்தால் போதும். இவற்றை கூகுளில் தேடி தனிப்பட்ட குழுவின் உரையாடல்களை கண்டுபிடிக்கலாம் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. இந்த பிரச்சினை 2019 இல் ஏற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.

“உங்கள் வாட்ஸ் அப் குரூப் சாட்களை கூகுள் வழியாக  யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்” :  பகீர் ரிப்போர்ட்!

இதுகுறித்து இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் கூறும் போது, இந்த தனியுரிமை பாதுகாப்பாற்ற வாட்ஸ் அப் ஆப்பின் மூலம், ப்ரொஃபைல் போட்டோ , பயனரின் செல்போன் எண்களை
கண்டுபிடிக்கலாம்.

அத்துடன் மோசமான விஷயம் என்னவென்றால், மூன்றாம் நபர் குழுவில் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருக்க, தனது விவரங்களை மறைத்து வைத்து கொள்ளவும் முடியும். குறிப்பிட்ட அந்த நபர் வெளியேற்றப்பட்டாலும், அவர் குழுவில் உள்ள பயனர்களின் செல்போன் எண்களை பட்டியலிட்டு எடுத்து செல்லவும் முடியும் என்று கூறி அதிர்ச்சியை கூட்டுகிறார்.

“உங்கள் வாட்ஸ் அப் குரூப் சாட்களை கூகுள் வழியாக  யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்” :  பகீர் ரிப்போர்ட்!

முன்னதாக வாட்ஸ் அப் விதிகள் மற்றும்நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது பெரும் விவாதங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதை தொடர்ந்து பயன்படுத்த முடியும், இல்லாவிட்டால் வாட்ஸ் அப்பை பிப்ரவரி மாதம் 8-ம் தேதி முதல் உபயோகிக்க முடியாது என்பது கூடுதல் தகவல்.