சுஷாந்த் தற்கொலை செய்வதுகொள்வதற்கு முன் கூகுளில் தேடிய பெயர்?

 

சுஷாந்த் தற்கொலை செய்வதுகொள்வதற்கு முன் கூகுளில் தேடிய பெயர்?

கிரிக்கெட் வீரர் தோனியைத் திரையில் தத்ரூபமாகக் கொண்டு வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சில காட்சிகளில் தோனியே நடித்திருக்கிறாரா என்று எண்ண வைத்த நடிப்புக்குச் சொந்தக்காரர். தோனியின் கிரிக்கெட் ரசிகர்கள், சுஷாந்தின் சினிமா ரசிகர்களாக ஆகினர். மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த இவர், ஜூன் 14-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் தற்கொலை செய்வதுகொள்வதற்கு முன் கூகுளில் தேடிய பெயர்?

சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த செய்தியை அவரின் வீட்டு பணிப்பெண் போலீசில் தெரிவித்ததாக தெரிகிறது. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் என்ன தேடினார் என்பதை மும்பை போலீஸ் தெரிவித்தாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் விசித்திரம் என்ன என்றால், கடைசியாக தன் பெயரையே கூகுள் சர்ச்சில் டைப் அடித்து தேடியிருக்கிறார்.

சுஷாந்த் தற்கொலை செய்வதுகொள்வதற்கு முன் கூகுளில் தேடிய பெயர்?

தன்னைப் பற்றிய நியூஸ், கட்டுரைகளைத் தேடி அவர் படித்திருக்கக்கூடும் அல்லது தன்னைப் பற்றி யாரேனும் எழுதியதை படிக்கத் தவறியிருக்கிறோமா என்றும் அவர் தேடியிருக்கலாம்.

சுஷாந்த்தின் இறுதி நிமிடங்களில் தன்னை தேடியிருக்கும் செய்தி அவரின் தனிமையையும் விரக்தியை உணர்த்துவதாக இருக்கிறது.