Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் காய்ச்சல் நேரங்களில் என்ன சாப்பிடலாம்?

காய்ச்சல் நேரங்களில் என்ன சாப்பிடலாம்?

காய்ச்சல்… இன்றைக்கு விதம்விதமான காய்ச்சல்கள் வந்து மனிதர்களை மிரளச் செய்கிறது. பொதுவாக காய்ச்சல் அல்லது வேறு சில நோய்கள் வருவதற்கு அடிப்படைக் காரணம் உடலில் கழிவுகள் தேங்குவதே. உடலில் தேங்கும் கழிவுகளும் நச்சுக்களுமே பல்வேறு பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றன.


கழிவகற்றி…
கழிவுகள் மற்றும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுப்பொருள்கள் உடலில் வெப்பத்தை உண்டாக்கி இயற்கையாகவே வெளியேற்றும் நிலையே காய்ச்சல். எனவே, காய்ச்சல் வந்தால் அதை மருந்துகள் மூலம் தடுக்காமல் இயற்கை வழிகளில் கழிவுகளை அகற்றும் பணிகளைச் செய்ய வேண்டும். அதாவது, ஏற்கெனவே கழிவுகளை அகற்ற தயாராக இருக்கும்போது நாமும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் பட்டினி கிடப்பது ஒரு வகை. இல்லையென்றால் காய்ச்சலின்போது வெளிப்படும் குமட்டல், வாய்க்கசப்பு, எச்சில் ஊறுதல், புளிப்புத்தன்மை, சுவையற்ற நிலை போன்றவற்றை சரிசெய்ய எளிய உணவுகளை உண்ண வேண்டும். இட்லி, இடியாப்பம் அல்லது குழைய வேக வைத்த கஞ்சி உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

மிளகு ரசம்…
இட்லி, இடியாப்பத்துக்கு இணை உணவுகளாக கொத்தமல்லித் துவையல், கறிவேப்பிலை துவையல், புதினாத் துவையல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கஞ்சியாகச் சாப்பிடும்போது கொத்தமல்லி விதை (தனியா), காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து வறுத்து அரைத்து உப்பு சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இது நாக்குச் சுவையின்மையைப் போக்கும்.

பகல் உணவாக குழைய வேக வைத்த புழுங்கலரிசிச் சோற்றுடன் மிளகு ரசம் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைப்பூண்டு, மிளகு, வெந்தயம் சேர்த்து செய்த ரசம், சூப், குழம்பு நல்லது. இரவு உணவாக இட்லி, இடியாப்பமே நல்லது. சளி இருந்தால் பாலில் வெள்ளைப்பூண்டு சேர்த்து வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து குடிக்கலாம்.


தண்ணீர், பழ ஜூஸ்…
காய்ச்சலின்போது எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்கலாம். அது சூடான அல்லது வெதுவெதுப்பான நீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரண நீரையும் குடிக்கலாம். உணவு உண்ண முடியாது என்றாலும் தண்ணீரையாவது குடிக்க வேண்டும். இது சிறந்த மருத்துவம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் நேரங்களில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களின் சாறுகளை அருந்துவது நல்லது. இந்தப் பழங்களின் சாறுகளை அருந்துவதால் குடல் பாதிக்கப்படாமல் காப்பதுடன் கழிவுகளை அகற்றவும், சூட்டினைக் குறைக்கவும் உதவும். இதுபோன்ற எளிய வழிமுறைகள் காய்ச்சலில் இருந்து காத்துக்கொள்ள உதவும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்”

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே விருப்ப...

அதிமுகவிடம் 30க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டு தொல்லைக்கொடுக்கும் பாஜக!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருக்கும் தேசிய கட்சியான பாஜக...

நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கமல் உருவம் பதித்த டி- ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப்க்கு தேனி பிரஸ் கிளப் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை விலைக்கு வாங்க நினைக்கும்...
TopTamilNews