அடுத்த கட்ட பயணம் என்ன? கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

 

அடுத்த கட்ட பயணம் என்ன? கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணியில் ஒருவர் கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

அடுத்த கட்ட பயணம் என்ன? கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தங்கள் பதவியில் இருந்து விலகினார்கள். இதனால் மக்கள் நீதி மய்யத்தில் பல முக்கிய பதவிகள் காலியாக உள்ளன. இதனால் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளின்படி பல முக்கிய முடிவுகள் கமல்ஹாசனால் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்த கட்ட பயணம் என்ன? கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

இந்நிலையில் கமல் ஹாசன் இணையவழி கலந்துரையாடல் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட பயணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை நாளை வெளியிடுகிறார். நாளை காலை 11 மணிக்கு கானொலி மூலம் உரையாடும் அவர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆரோக்கியமும் பாதுகாப்போம், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட பயணம் ,கட்சி கட்டமைப்பினை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு , உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.