ரூ.60 கோடி என்னவானது? – டெல்லி அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

 

ரூ.60 கோடி என்னவானது? – டெல்லி அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: அன்சல் பிரதர்ஸ் அபராதமாக டெபாசிட் செய்த ரூ.60 கோடி என்னவானது என்று டெல்லி அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அப்ஹார் சினிமா தீ விபத்து வழக்கில் அன்சல் பிரதர்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி அபராதமாக செலுத்தியது. இந்த தொகை துவாரகாவில் அதிர்ச்சி மையம் அமைக்க பயன்படுத்தப்படும் என்று முன்னதாக டெல்லி அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அன்சல் பிரதர்ஸ் அபராதமாக டெபாசிட் செய்த ரூ.60 கோடி என்னவானது என்று டெல்லி அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அப்ஹார் தீ விபத்து வழக்கில் அன்சால் பிரதர்ஸ் செலுத்திய அபாரத தொகை சுமார் ரூ.60 கோடியின் நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே உள்ள அதிர்ச்சி மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்யப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில் ரூ.60 கோடியை இங்கு ஏன் பயன்படுத்தவில்லை என்று ஆம் ஆத்மி அரசாங்க ஆலோசகரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.