“மாணவனாக… ஆசிரியராக… பெற்றோராக”- பல அவதாரம் எடுத்து முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

“மாணவனாக… ஆசிரியராக… பெற்றோராக”- பல அவதாரம் எடுத்து முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவத் துறை நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பின் முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்களிடம் தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.

“மாணவனாக… ஆசிரியராக… பெற்றோராக”- பல அவதாரம் எடுத்து முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

அவ்வாறு ஆலோசனை மேற்கொண்டபோது கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கேள்விகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கியுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “முதலமைச்சர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை ஒரு பெற்றோராக நினைத்துக் கேள்விகளைக் கேட்டார். அதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதில் கூறியிருக்கிறோம்.

“மாணவனாக… ஆசிரியராக… பெற்றோராக”- பல அவதாரம் எடுத்து முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

தன்னை ஓர் ஆசிரியராகவும் முதல்வர் நினைத்துக்கொண்டு சில கேள்விகள் கேட்டார். அதற்கும் பதில் கூறினோம். தன்னை ஒரு மாணவனாகவும் கருதி முதல்வர், நான் இந்தச் சூழ்நிலையில், இந்த மனநிலையில் இருந்தால் எப்படித் தேர்வை நடத்துவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இறுதியாக மாணவரின் உடல், மனநலன் கருதித் தேர்வை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார்” என்றார்.